|
125
|
பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு
வேம்புமுதல் தடிந்த ஏந்துவாள் வலத்துப்
போந்தைக் கண்ணிப் பொறைய கேட்டருள்
|
|
பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு - பழையன் என்பான் காத்த தளிர்மிக்க நீண்ட
கொம்புகளை யுடைய, வேம்பு முதல் தடிந்த ஏந்து வாள்வலத்துப் போந் தைக் கண்ணிப் பொறைய
கேட்டருள் - வேம்பின் அடியினைக் குறைத்த ஏந்திய வாளின் வெற்றியினையும் பனம்பூ மாலையினை
யும் உடைய பொறையனே கேட்டருள்வாயாக ;
பழையன் - ஓர் குறுநில மன்னன் ; மோகூரில்
இருந்தவன். பழையன் காவன் மரமாகிய வேம்பினைத் தடிந்ததனை, 1"பழையன்
காக்குங் கருஞ்சினை வேம்பின், முரரை முழுமுதல் துமியப் பணணி" என்பதனானறிக.
|
1
பதிற். 5. பதிகம்.
|
|