4. நீர்ப்படைக் காதை



140

ஊழிதொ றூழி யுலகங் காத்து

வாழ்க எங்கோ வாழிய பெரிதென


139
உரை
140

        ஊழிதோறூழி உலகங் காத்து வாழ்க எங்கோ வாழிய பெரிது என - எம் வேந்தே பல்லூழி காலம் இவ்வுல கினைக் காவல்செய்து வாழ்வாயாக என்று கூற ;

        ஊழி - முறையாலென்றுமாம். அவன் உலகங் காத்து வாழ்க ; எங்கோவே நீ பெரிது வாழிய என இருவரையும் வாழ்த்தினானாக வுரைத்தலுமாம்.