|
145
150
|
அகல்வாய் ஞாலம் ஆரிருள் விழுங்கப்
பகல்செல முதிர்ந்த படர்கூர் மாலைச்
செந்தீப் பரந்த திசைமுகம் விளங்க
அந்திச் செக்கர் வெண்பிறை தோன்றப்
பிறையேர் வண்ணம் பெருந்தகை நோக்க
இறையோன் செவ்வியிற் கணியெழுந் துரைப்போன்
எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது
மண்ணாள் வேந்தே வாழ்கென் றேத்த
|
|
அகல்வாய் ஞாலம் ஆரிருள் விழுங்க - அகன்ற இடத்தினையுடைய உலகத்தினை அரிய இருள் மூடுமாறு,
பகல் செல - ஞாயிறு மறைந்த காலை, முதிர்ந்த படர்கூர் மாலைச் செந்தீப் பரந்த திசைமுகம்
விளங்க - மிக்க வருத்தத்தைச் செய்யும் மாலையாகிய சிவந்த எரி பரந்த திசையின்முகம்
விளக்கமுறும் வண்ணம், அந்திச் செக்கர் வெண்பிறைதோன்ற - செவ்வானிடத்தே வெள்ளிய
பிறை தோன்ற, பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க - அங்ஙனம் பிறை எழுந்தபடியைப்
பெரிய தகுதியுடைய குட்டுவன் பார்க்க, இறையோன் செவ்வியிற் கணி எழுந்து உரைப்போன்
- மன்னனது காட்சியானே காலக்கணிதன் எழுந்து கூறுபவன், எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது
மண்ணாள் வேந்தே வாழ்கென்று ஏத்த - நிலத்தினை யாளும் மன்னனே நீ வஞ்சியினின்றும்
நீங்கிய காலம் முப்பத்திரண்டு திங்களாகும் வாழ்வாயாகவென்று போற்ற ;
பகல் - பகற்பொழுதுமாம், விழுங்கச்
செலவென்க. படர்தல் - நினைதலுமாம். பிரிந்திருப்பார்க்குப் படர்செய்யும் மாலை யென்க.
மாலை - மாலைப் பொழுதில் என்றுமாம். செந்தீ - செவ்வானத்தை யுணர்த்திற்று. அந்திச்
செக்கர், பிறைக்கு அடை, ஏர்தல் - எழுதல். செவ்வி -குறிப்பு. |
|