4. நீர்ப்படைக் காதை

25

நீணில மன்னர் நெஞ்சுபுக லழித்து
வானவர் மகளிரின் வதுவைசூட் டயர்ந்தோர்


25
உரை
26

       நீள்நிலமன்னர் நெஞ்சுபுகல் அழித்து - பெரிய உலகாளும் அரசரது உள்ளத்தருக்கினைத் தொலைத்து, வானவர் மகளிரின் வதுவை சூட்டு அயர்ந்தோர் - தேவமகளிரால் மணமாலை சூட்டப் பெற்றோரும் ;

       புகல் - செருக்கு ; புகல்வு எனவும்படும் ; 1"மாறுபொரு தோட்டிய புகல்வின்" என்பது காண்க. வதுவை - மணமாலை ; ஆகுபெயர். வதுவைசூட் டயர்ந்தோர் என்றது போர்க்களத்துப் பொருது இறந்தோரை என்க.


1. குறிஞ். 135.