4. நீர்ப்படைக் காதை



160

இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர்

வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு
செங்கோற் றன்மை தீதின் றோவென


159
உரை
161

        இளங்கோ வேந்தர் இறந்ததற்பின்னர் - இளவரசராகிய ஒன்பது மன்னரும் இறந்ததன் பின், வளங்கெழு நன்னாட்டு - செல்வமிக்க நல்ல நாட்டின்கண், மன்னவன் கொற்றமொடு செங்கோல் தன்மை தீது இன்றோ என - அரசனுடைய வெற்றியும் செங்கோலின் இயல்பும் குற்றிமின்றியுள்ளனவோ என்று கேட்ப ;

        இளங்கோ வேந்தரென்றது இக்காதையுள் முன்னர்க் கூறிய ஒத்த பண்பினராம் ஒன்பது இளவரசரை. வளங்கெழு நாடு - சோழ நாடு.