|
|
மாடல மறையோன் கொள்கென் றளித்தாங்கு
ஆரிய மன்னர் ஐயிரு பதின்மரைச்
சீர்கெழு நன்னாட்டுச் செல்கவென் றேவித்
|
|
ஆங்கு ஆரிய மன்னர் ஐயிருபதின்மரை - ஆரிய நாட்டரசராகிய நூற்றுவரை, சீர்கெழு நன்னாட்டுச்
செல்க வென்று ஏவி - நும் சிறப்புற்ற நல்ல நாட்டின்கண் செல்லுமின் என்று கட்டளையிட்டு
;
ஆரிய மன்னர் ஐயிருபதின்மராவார்
செங்குட்டுவனுக்கு நட்பாளராகிய நூற்றுவர் கன்னர் ; இவர்கள் செங்குட்டுவன் தானையுடன்
கங்கையைக் கடத்தற்கு நாவாய்கள் தந்தமையைக் 1"கால்
கோட் காதையா னறிக.
|
1.
சிலப். 26: 176-7,
|
|