4. நீர்ப்படைக் காதை



உலையா வெஞ்சமும் ஊர்ந்தமர் உழக்கித்
தலையுந் தோளும் விலைபெறக் கிடந்தோர்


27
உரை
28

       உலையா வெஞ்சமம் ஊர்ந்து அமர் உழக்கி-பொரத் தொலையாத வெவ்விய போர்க்களத்தே அடர்ந்து போரின்கண் பகைவரைக் கலக்கி, தலையும் தோளும் விலைபெறக் கிடந்தோர் - மன்னர்கண்டு அன்புடையோராம்படி தலையும் தோளும் வேறு வேறாகக் கிடந்தோரும் ;

       விலைபெறுதல் - மதிப்பெய்துதல்.