|
210 |
துணையணைப் பள்ளித் துயிலாற்றுப்
படுத்தாங்கு
எறிந்துகளங் கொண்ட இயறேர்க் கொற்றம்
அறிந்துரை பயின்ற ஆயச் செவிலியர்
தோட்டுணை துறந்த துயரீங் கொழிகெனப்
பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்தச்
|
|
ஆங்கு - வடதிசைக்கண், எறிந்து களம்கொண்ட இயல்தேர்க் கொற்றம் அறிந்து - பகைவரை
யழித்துப் போர்க் களத்தைத் தனதாக்கிய இயற்றப்பட்ட தேரினையுடைய வேந்தனது வெற்றியை
அறிந்து, உரைபயின்ற ஆயச் செவிலியர் - கட்டுரைத்தல் பயின்ற முதுபெண்டிராகிய செவிலியர்
கூட்டம், தோள்துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக என - கணவனைப் பிரிந்துறைந்த துன்பத்தை
இப்பொழுது ஒழிவாயாகவென்று, பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்த - பாட்டுடன் சேர்த்துப்
பல்லாண்டு கூறி வாழ்த்தவும் ;
ஆங்கு - அசையுமாம். தோட்டுணை - தோளுக்குத்
துணையானவன் ; கணவன். 1"நரைவிரா
வுற்ற நறுமென் கூந்தற், செம்முகச் செவிலியர் கைமிகக் குழீஇக், குறியவு நெடியவு முரைபல
பயிற்றி, இன்னே வருகுவ ரின்றுணை யோரென, உகந்தவை மொழியவும்" என்பது ஈண்டு ஒப்புநோக்கற்பாலது.
|
1.
நெடுநல். 152-6.
|
|