|
215
|
சிறுகுறுங் கூனுங் குறளுஞ் சென்று
பெறுகநின் செவ்வி பெருமகன் வந்தான்
நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுகென
|
|
சிறு குறுங் கூனும் குறளும் சென்று - சிறு தொழில் செய்யும் குறிய கூனும் குறளும் சென்று, பெறுகநின்
செவ்வி பெருமகன் வந்தான் - அரசன் வந்தனன் நின்எழிலைப் பெறுவாயாக, நறுமலர்க் கூந்தல்
நாள்அணி பெறுகென - நினது நறிய மலர்க்குழல் நாளொப்பனை பெறுவதாக என்று கூறவும் ;
கூனும் குறளு முதலாயினார் அந்தப்புரத்திலே குறுந்தொழில் செய்வாராதல் 1"கூனுங்
குறளும் ஊமுங் கூடிய, குறுந்தொழி லிளைஞர் செறிந்து சூழ்தர "என முன்னர்ப் போந்ததனாலும்
அறியப்படும்.
|
1.
சிலப். 20 : 17.
|
|