4. நீர்ப்படைக் காதை

225





230

வடதிசை மன்னர் மன்னெயின் முருக்கிக்
கவடி வித்திய கழுதையே ருழவன்
குடவர் கோமான் வந்தான் நாளைப்
படுநுகம் பூணாய் பகடே மன்னர்
அடித்தளை நீக்கும் வெள்ளணி யாமெனும்

தொடுப்பேர் உழவ ரோதைப் பாணியும்


225
உரை
230

        வடதிசை மன்னர் மன்னெயில் முருக்கி - வட நாட்டு அரசர்களின் நிலைபெற்ற மதிலை அழித்து, கவடி வித்திய கழுதை ஏருழவன் - வெள்வரகை விதைத்த கழுதை பூட்டிய ஏரினை உழுவோனாகிய, குடவர் கோமான் வந்தான் - குடநாட்டினர் தலைவன் வந்தனன், நாளைப் படுநுகம் பூணாய் பகடே மன்னர் அடித்தளை நீக்கும் வெள்ளணியாம் எனும் - நாளை பகையரசர்களின் காற்றளையை நீக்குவதாகிய அரசன் பிறந்த நாட் பெரு மங்கலமாகும் ஆகலின் பகடே நீயும் நுகம்பூண்டு உழாயாவாய் என்னும், தொடுப்பேர் உழவர் ஓதைப்பாணியும் - விழாக்கொண்டு உழும் உழவர் முழக்கமாகிய மருதப் பாடலும் ;

கவடி - வெள்வரகு ; இஃது உண்ணாவரகு எனவும் கூறப்படும். பகைவர் அரணையழித்துக் கழுதை யேரால் உழுவித்து வெள்ளை வரகும் கொள்ளும் வித்துவரென்பது 1"எண்ணார் பல்லெயில் கழுதையே ருழுவித், துண்ணா வரகொடு கொள்வித் தின்று" 2"வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி, வெள்ளைவரகுங் கொள்ளும் வித்தும் வைக லுழவ" என்பவற்றானறியப்படும். பதிற்றுப்பத்தின் பழைய உரையாசிரியர் 3"வெள்வர குழுத கொள்ளுடைக் கரம்பையாகிய வன்பாலிலே கெட்டுப் போயிருந்து ஆண்டு விளைந்த வெள்வரகு உண்பதன்றித் தாம் பண்டு உண்ணும் செந்நெல் வல்சி உண்ணக் கிடையாதபடி மிடிபடுகின்றார்" என உரைப்பதிலிருந்து வெள்ளைவரகென்பது காட்டிலே மிடியுற்றா ருண்பதொரு பொருளாமென்பது போதரும். வெள்ளணி - பிறந்தநா ளொப்பனை. தொடுப்பு - விதைப்புமாம். 4"தொடுப்பி னாயிரம் வித்தியது விளைய" என்பது காண்க..


1. பு. வெ, மாலை. 6 ; 26. 2. புறம். 391.
3. பதிற், 75 : 11-2. (உரை) 4. மதுரைக். 11.