|
30
|
நாள்விலைக் கிளையுள் நல்லம ரழுவத்து
வாள்வினை முடித்து மறத்தொடு முடிந்தோர்
|
|
நாள்
விலைக் கிளையுள் - தம் வாழ்நாளை விலையாகத் தரும் மறவருள், நல்அமர் அழுவத்து - நல்ல
பொரு களப் பரப்பிலே, வாள் வினைமுடித்து மறத்தொடு முடிந்தோர் - வாளாற் செய்யும் வினையனைத்தையும்
செய்து முடித்து வீரத்தோடு பட்டோரும் ;
நாள்விலைக் கிளை - அரசனளித்த செஞ்சோற்றுக்கும்
சிறப்புக்கும் விலையாகத் தம் வாழ்நாளைத் தரும் மறவர். கிளையுள் எனபதனை இடைநிலை
விளக்காகக் கொண்டு முன்னும் பின்னுங் கூட்டுக. |
|