|
|
குழிகட் பேய்மகள் குரவையிற் றொடுத்து
வழிமருங் கேத்த வாளொடு மடிந்தோர்
|
|
குழிகட் பேய்மகள் குரவையின் தொடுத்து - குழிந்த கண்ணினையுடைப் பேய்மகள் மண்டிலமிட்
டாடுங் குரவை யுடன் தொடுத்து, வழிமருங்கு ஏத்த வாளொடு மடிந்தோர் - தம் வழியிலுள்ளாரையும்
போற்றும்படித் தம் வாளோடு பட்டோ ரும் ;
தொடுத்து - இயைத்து. இவர் வீரங்
கண்டு அவர் வழியிலுள்ளா ரையும் ஏத்திற்று என்க. மருங்கு - கிளை. |
|