|
|
கிளைக டம்மொடு கிளர்பூ ணாகத்து
வளையோர் மடிய மடிந்தோர் மைந்தர்
|
|
கிளைகள் தம்மொடு - தமக்குறவாகிய வீரர்களுடன், கிளர்பூண் ஆகத்து வளையோர் மடிய மடிந்தோர்
- விளங்கும் பூணணிந்த மார்பினையும் வளையினையும் உடைய மகளிர் உடன் மடிய இறந்தோரும்
ஆகிய இவர்களின், மைந்தர் - ஆண்மை யுடைய மக்களும் ;
கிளைகள் தம்மொடு மடிந்தோர், வளையோர்
மடிய மடிந்தோர் என்க. இனி, வளையோர், தம் கிளர்பூணாகத்துப் பொருந்தி மடிய மடிந்தோர்
எனலும் அமையும். 1"பாசடகு மிசையார்
பனிநீர் மூழ்கார், மார்பகம் பொருந்தியாங் கமைந்தனரே" என்பதூஉங் காண்க. 2"முலையு
முகனுஞ் சேர்த்திக் கொண்டோன், றலையொடு முடிந்தநிலை" என்பர் தொல்காப்பியர். வதுவை
சூட்டயர்ந்தோர் முதலாகக் கூறிய துஞ்சிய வீரர்களின் மைந்தரென்க.
|
1.
புறம். 61.
2. தொல். பொருள், 79.
|
|