|
35
|
மலைத்துத் தலைவந்தோர் வாளொடு
மடியத்
தலைத்தார் வாகை தம்முடிக் கணிந்தோர்
|
|
மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடியத் தலைத் தார் வாகை தம் முடிக்கு அணிந்தோர்-மாறுபட்டுத்
தம்பாற் பொர வந்தோர் வாளுடனே பட முதன்மையுடைய வாகை மாலையினைத் தம் முடியிற் சூடியோரும்
;
தார்-தூசிப் படையெனக் கொண்டு, தலைவந்தோராகிய
தூசிப் படையினர் மடிய எனலுமாம். வாகையணிந்தோர் - பகைவரது புறக்கொடை கண்டு மீண்டோராவர்.
|
|