|
|
திங்களைப் போற்றுதும்
திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகளித்த லான் |
|
திங்களைப்
போற்றுதும் திங்களைப் போற்றுதும் - யாம் திங்களைப் போற்றுவேம்; திங்களைப் போற்றுவேம்;
கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று - தாது பரந்த மாலையையுடைய சோழனது
குளிர்ச்சியையுடைய வெண்குடை போன்று, இ - இந்த, அம் கண் உலகு - அழகிய இடத்தையுடைய
உலகிற்கு, அளித்தலால் - பொதுவற அளி செய்தலால்.
அடுக்கு, சிறப்பின்கண் வந்தது; மேல்வரும்
மூன்றடுக்குகளும் அன்ன. இது
1"விரவியும்
வரூஉ மரபின வென்ப"
என்பதனால்,
பண்பும் பயனும் விரவிவந்த உவமம், உலகை அளித்தலான் என விரித்தலுமாம். இது பாடாண்டிணைக்கண்
2
'நடைமிகுத் தேத்திய குடை நிழன் மரபு' என்னுந் துறையாகும். 'இத்தொடர் நிலைச் செய்யுட்குச்
சிறந்த மங்கல மொழியாகலின் திங்களை முற்கூறினார்' என்பர் அடியார்க்கு நல்லார்.
மங்கல வாழ்த்து என்பதற்கு இரட்டுற மொழிதலால் நூன்முகத் துரைக்கப்படும் மங்கலமாகிய
வாழ்த்து என்றலும் பொருந்தும். 3
"முந்நீர் நாப்பண்" என்னும் புறப்பாட்டில், 'உவவுமதி கண்டு விறலியும் யானும் வளவன்
வெண்குடையை யொக்குமெனத் தொழுதனம்' எனபதன் கருத்து இதனுடன் ஒத்திருப்பது காண்க.
|
1
தொல். பொருள். சூ. 277. 3
புறம் 60.
2
தொல். பொருள். சூ. 61.
|
|