|
5
|
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு
போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு
மேரு வலந்திரித லான். |
|
ஞாயிறு
போற்றுதும் ஞாயிறு போற்றுதும் - யாம் ஞாயிற்றைப் போற்றுவேம்; ஞாயிற்றைப் போற்றுவேம்;
காவிரி நாடன் திகிரிபோல் - பொன்னி நாட்டையுடைய சோழனது ஆழிபோல், பொற்கோட்டு
மேருவலம் திரிதலான் - பொன்னாலாய கொடுமுடியை யுடைய மேருவை வலமாகத் திரிதருதலால்.
திகிரி - ஆக்கினாசக்கரம். பொன்
- பொலிவுமாம். இது தொழில் பற்றிய உவமம். நச்சினார்க்கினியர் புறத்திணையியலுரையில்,
'குடை நிழல் மரபு' என்புழி, 'மரபு என்றதனாற் செங்கோலும் திகிரியும் போல்வனவற்றைப்
புனைந்துரையாக்கலுங் கொள்க' என்று உரை கூறி, திகிரியைப் புனைந்துரைத்தற்கு இதனையே
எடுத்துக் காட்டியுள்ளார். |
|