அவரை
- அத்தன்மையார் இருவரையும், இருபெருங் குரவரும் - பெருமையுடைய இருவர் குரவர்களும், ஒரு
பெருநாளால் - ஒரு பெருநாளிலே, மண அணி காண மகிழ்ந்தனர் மணக்கோலங் காண விரும்பினர்;
மகிழ்ந்துழி - விரும்பியவளவிலே,
குரவர் - தந்தையும் தாயும். மணவணி
காண என்பது ஒரு சொல்லாய் அவரை யென்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. நாளால் - நாளில்;
வேற்றுமை மயக்கம். மகிழ்தல் - விரும்புதல் உழி - அளவு.
|