1. மங்கலவாழ்த்துப் பாடல்


யானை எருத்தத் தணியிழையார் மேலிரீஇ
மாநகர்க் கீந்தார் மணம்.


43
உரை
44

       யானை எருத்தத்து அணியிழையார் மேல் இரீஇ மாநகர்க்கு ஈந்தார் மணம் - அவர் யானையின் எருத்தத்தின் மேல் மங்கல மகளிரை இருத்தி அம் மாநகர்க்கு இவர் மண மென்னும் மகிழ்ச்சியை ஈந்தார்.

       எருத்தம் - புறக்கழுத்து. ஈந்தார் - அறிவித்தாரென்றபடி; சில மகளிரை அணிந்து யானையேற்றி அறிவித்தல் மரபென்க.