அவ்வழி
- அவ்விடத்து, முரசு இயம்பின - முரசு முதலியன இயம்பின; முருடு அதிர்ந்தன - மத்தளம்
முதலியன அதிர்ந்தன; முறை எழுந்தன பணிலம் - சங்கம் முதலியன முறையே முழங்குத லெழுந்தன;
வெண்குடை அரசு எழுந்த தொர் படி எழுந்தன - வெண்குடைகள் அரசன் உலா வெழுந்த படியாக
எழுந்தன; அகலுள் மங்கல அணி எழுந்தது - ஊரிலே மங்கலநாண் வலஞ் செய்தது.
முருடு - பத்தலுமாம். ஓர், விகாரம்.
அகலுள் - தெருவுமாம். எழுந்தது - எழுந்து வலஞ் செய்த தென்றபடி. 'மங்கலவணி எங்கும்
எழுந்தது' என்ற அடியார்க்குநல்லார் கருத்து விளங்குமாறின்று.
|