1. மங்கலவாழ்த்துப் பாடல்


மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்


48
உரை
49

       மாலை தாழ் சென்னி வயிரமணித் தூணத்து - மாலைகள் பொருந்திய சென்னியையுடைய வயிரமணித் தூண்களையுடைய மண்டபத்தில், நீல விதானத்து நித்திலப் பூம் பந்தர்க் கீழ் - நீலப் பட்டினாலாகிய மேற்கட்டியின் கீழ் அமைத்த அழகிய முத்துப் பந்தரிடத்தே,

       தாழ்தல் - தங்குதல்; தொங்குதலுமாம். தூண் - மண்டபத்திற்கு ஆகுபெயர். அத்து, சாரியை. பூ - பொலிவு. முத்து, ஒளி பெறுதல் நோக்கி நீல விதானங் கூறினார். அக்காலத்து முத்து நோக்குவார் ஒப்புக்கு நீலப்பட்டினை விரித்து நோக்குவர் என்ப.