1. மங்கலவாழ்த்துப் பாடல்



55
விரையினர் மலரினர் விளங்கு மேனியர்

உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை
முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்


54
உரை
59

       விரையினர் மலரினர் விளங்கு மேனியர் உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர் - விளங்குகின்ற மேனியையுடைய மகளிர் விரையினராயும் மலரினராயும் உரையினராயும் பாட்டினராயும் ஒதுங்கிப் பார்க்கும் பார்வையினராயும், சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர் - அண்ணாந்துயர்ந்த இளைய முலையினையுடைய மகளிர் சாந்தினராயும் புகையினராயும் விளங்குகின்ற மாலையினராயும் இடிக்கப் பெற்ற சுண்ணத்தினராயும், விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை முளைக்குடம் நிரையினர் முகிழ்த்த மூரலர் - அரும்பிய புன்முறுவலையுடைய மகளிர் விளக்கின ராயும் கலத்தினராயும் விரிந்த முளைப்பாலிகை யினராயும் நிறை குடத்தினராயும் வந்து திரண்டனர்.

       விரை - கோட்டம் முதலாயின. உரை - பாராட்டுரை. புகை - அகில் முதலியவற்றானாய நறும்புகை. சுண்ணம் - பூசுகின்ற பொற் பொடி. கலம் - அணிகலன். குடம் - நிறை குடம். நிரையினர் - கூடினர். மேனியரும் முலையினரும் மூரலருமாகிய மகளிர் விரை முதலியன வுடையராய் வந்து கூடினரென்க. விரையினர் மலரினராகிய விளங்கு மேனியர் என்றிங்ஙனம் கூட்டி, இக்கொடியன்னார் என முடிப்பர் அரும்பதவுரையாசிரியர்.