1. மங்கலவாழ்த்துப் பாடல்


.காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதறு கெனஏத்திச் சின்மலர் கொடுதூவினார


61
உரை
62

       காதலற் பிரியாமல் - இவள் தன் காதலனைக் கண்ணினும் மனத்தினும் பிரியாதிருக்க, கவவுக்கை ஞெகிழாமல் - இவள் காதலனும் இவளை அகத்திட்ட கை நெகிழாதிருக்க, தீது அறுக என ஏத்தி - இருவரும் தம் கூட்டத்திற்கு இடையூறின்றி நெடிது வாழ்வாராக என வாழ்த்தி, சின்மலர் கொடு தூவி - சில மலரைத்தூவி,

       கவவு - அகத்தீடு; உரிச்சொல். ஏத்தி என்பதற்குத் தம் வழி படு தெய்வத்தை நினைந்து துதித்து என்னலுமாம். மலர்கொடு - மலரை.