1. மங்கலவாழ்த்துப் பாடல்

  மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி யுலகிற்கு அவன்அளிபோல்
மேல்நின்று தான்சுரத்த லான்.


7
உரை
9

       மா மழை போற்றுதும் மா மழை போற்றுதும் - யாம் பெரிய மழையைப் போற்றுவேம்; பெரிய மழையைப் போற்று வேம்; நாம நீர் வேலி உலகிற்கு - அச்சத்தைத் தருகின்ற கடல்சூழ் உலகிற்கு, அவன் அளிபோல் - அவன் அளி செய்யு மாறுபோல, மேல் நின்று தான் சுரத்தலான் - மேலாகி நின்று தன் பெயலால் வளஞ்சுரத்தலால்.

       நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது. வேலி - சூழ்தல். அளி - ஈகை. தான், அசை. மேலே பெயர் கூறினமையின் அவன் எனச் சுட்டி யொழிந்தார்.