|
10
|
பூம்புகார்
போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
வீங்குநீர் வேலி யுலகிற் கவன்குலத்தோடு
ஓங்கிப் பரந்தொழுக லான். |
|
பூம்புகார்
போற்றுதும் பூம்புகார் போற்றுதும் - யாம் அழகிய புகாரினைப் போற்றுவேம்; அழகிய புகாரினைப்
போற்றுவேம்; வீங்கு நீர் வேலி உலகிற்கு - கடலை வேலியாக வுடைய உலகின்கண், அவன்
குலத்தோடு ஓங்கிப் பரந்து ஒழுக லான் - தொன்றுதொட்டு அவன் குலத்தோடு பொருந்தி உயர்ந்து
பரந்து நடத்தலால்.
பூ - அழகு, பொலிவு. பூம்புகார், மெலித்தல்
விகாரம். வீங்கு நீர் - மிக்க நீர் ; ஆவது கடல். அவன் குலத்தினைப் புகழ்வார் இதனையும்
புகழ்வரென்பது கொள்க.
[அடி. இறப்பப் புனைந்துரைத்தற்குக்
குடை நிழன் மரபு என்றதனால் திகிரியும் கொடையும் உயர்ச்சியும் புனைந்து கூறியவாறாயிற்று.]
[அரும். இவை நான்கு சிந்தியல் வெண்பாவும் செம்பியனையும் புகாரினையும் சிறப்பித்தன.] |
|