1. மங்கலவாழ்த்துப் பாடல்




15

ஆங்கு,
பொதியி லாயினும் இமய மாயினும்

பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய
பொதுவறு சிறப்பின் புகாரே யாயினும்
நடுக்கின்றி நிலைஇய என்ப தல்லதை
ஒடுக்கங் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே.


13
உரை
19

       ஆங்கு - ஆதலால், பொதியில் ஆயினும் - பொதியிலும், இமயம் ஆயினும் - இமயமும், பதி எழு அறியாப் பழங்குடி கெழீஇய பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும் - பதியினின்றும் பெயர்தலை யறியாத பழைய குடிகள் பொருந்தின பொதுமை நீங்கிய சிறப்பினையுடைய புகாரும், நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை - ஆதியிற்றோன்றிச் சலிப்பின்றி நிலைபெற்றனவென்று கூறினல்லது, ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின் - அவற்றின்கண் உயர்ந்தோர் இருத்த லான் அவற்றிற்கு முடிபுண்டென்று கூறார், முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே - முற்றிய கேள்வியால் அனைத்து முணர்ந்த பெரியோர்.

       அவை அத்தன்மையவாதலானும், உயர்ந்தோருண்மையானும் முழுதுணர்ந்தோர் ஒடுக்கங் கூறார் என்க. ஆயினும் என்பது ஓர் எண்ணிடைச் சொல்;

       1"கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும் கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே"

       என்னும் புறனடையாற் கொள்ளப்படும். பதியெழு வறியாமைக்குக் காரணம் செல்வ மிகுதியும், பகையின்மையும் ஆம். பொதுவறு சிறப்பு - தனக்கே யுரிய சிறப்பு. நிலீஇயர் என்று பாடங் கொண்டு, நிற்பதாகவென் றுரைப்பர் அரும்பத வுரையாசிரியர். முடித்த கேள்வி - புலத்துறை முற்றிய கேள்வி; கரை கண்ட கேள்வி.

       [அடி. உயர்ந்தோர் -- முனிவனும், இறைவனும், அரசனும்; இனி, உயர்ந் தோர் -- அகத்தியனும், இருடிகளும், பழங்குடியினுள்ளாரும் என்றுமாம்; என்றது இமயத்தோடும் பொதியிலோடுமுள்ள இருடிகளையும் வணிகரையும் உவமித்த வாறாம்.]

1 தொல். இடைச்சொல்லியல், 48.