1. மங்கலவாழ்த்துப் பாடல்


நாகநீள் நகரொடு நாகநா டதனொடு
போகநீள் புகழ்மன்னும் புகார்நக ரதுதன்னில்


21
உரை
22

       நாக நீள் நகரொடு நாக நாடு அதனொடு - நெடிய சுவர்க்கத்துடனும் நாகருலகத்துடனும் பொருந்திய, போகம் நீள் புகழ் மன்னும் புகார் நகர் அது தன்னில் - நீண்ட புகழும் போகமும் நிலைபெற்ற புகார் என்னும் அந்நகரின்கண்,

அவற்றொடும் ஒக்க மன்னும் புகார் எனலுமாம். எதிர் நிர னிறை.