மாக
வான் நிகர் வண் கை மாநாய்கன் குலக்கொம்பர் ஈகை வான் கொடி அன்னாள் - விசும்பிடத்து
மழையை நிகர்த்த வண்மை பொருந்திய கையையுடைய மாநாய்கனது குலத்திற் றோன்றிய பூங்கொம்பும்
மேலான பொற்கொடியும் போல் வாள், ஈராறு ஆண்டு அகவையாள் - பன்னீராண்டிற்கு உட்பட்ட
பிராயத்தினளாயினள்.
மாநாய்கன் - சிறப்புப் பெயர் போலும்.
ஈகை - பொன். மேல் 'பொன்னங் கொடிபோலப் போதந்தாள்' என்பது காண்க. வான் கொடி
- வான வல்லியுமாம். அகவை - உட்பட்டது.
|