|
5
|
ஒண்டொடித் தடக்கையின் ஒண்மலர்ப்
பலிதூஉய்
வெண்திரி விளக்கம் ஏந்திய மகளிர்
உலக மன்னவன் வாழ்கென் றேத்திப்
பலர்தொழ வந்த மலரவிழ் மாலை
|
|
ஒண்டொடித்
தடக்கையின் ஒண்மலர்ப் பலிதூஉய் - ஒள்ளிய வளையணிந்த பெரிய கையானே விளக்க மமைந்த
மலர்ப்பலியைத் தூவி, வெண்டிரி விளக்கம் ஏந்திய மகளிர் - வெள்ளிய திரியினையுடைய
விளக்குகளை எடுத்த பெண்டிர், உலக மன்னவன் வாழ்கென்று ஏத்தி - இவ்வுலகினையாளும் அரசன்
நீடு வாழ்வானாகவென்று போற்றி, பலர் தொழவந்த மலர் அவிழ் மாலை - பலரும் வணங்கும்
வண்ணம் வந்த பூக்கள்மலரும் மாலைக்காலம் ;
மாலைக்காலத்தே மலர்தூஉய் விளக்கமேந்துதல்,
1"அகனக
ரெல்லாம் அரும்பவிழ்முல்லை, நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகன் மாய்ந்த, மாலை மணிவிளக்கங்
காட்டி" என வருவதனானறிக. பலி தூஉய் ஏந்திய மகளிர் பலரும் ஏத்தித் தொழவந்த மாலை
என்க.
|
1.
சிலப், 9 : 1-3.
|
|