|
45
|
முமைந்தரும் மகளிரும் வழிமொழி
கேட்ப
ஐங்கணை நெடுவேள் அரசுவீற் றிருந்த
வெண்ணிலா முன்றிலும் வீழ்பூஞ் சேக்கையும்
மண்ணீட் டரங்கமும் மலர்ப்பூம் பந்தரும்
வெண்கால் அமளியும் விதானவே திகைகளும்
தண்கதிர் மதியம் தான்கடி கொள்ளப்
|
|
மைந்தரும்
மகளிரும் வழிமொழி கேட்ப - ஆடவரும் மகளிரும் தன் பின் நின்று தன்மொழி கேட்டு நடக்க,
ஐங்கணை நெடுவேள் அரசு வீற்றிருந்த - ஐந்து மலரம்புகளையுடைய மன்மதன் அரசனாகப் பெருமிதத்தோடமர்ந்த,
வெண்ணிலா முன்றிலும் - வெள்ளிய நிலா முற்றத்தினையும், வீழ்பூஞ் சேக்கையும்- விரும்பப்படும்
மலர்நிறைத்த படுக்கையினையும், மண்ணீட்டு அரங்கமும் - சுதைபூசிய அரங்கினையும், மலர்ப்பூம்
பந்தரும் - மலர்களையுடைய பொலிவுபெற்ற பந்தரினையும், வெண்கால் அமளியும் - வெள்ளிய
கால்களையுடைய கட்டில்களையும், விதான வேதிகைகளும் - மேற்கட்டியினையுடைய மேடைகளை யும்,
தண்கதிர் மதியந்தான் கடிகொள்ள - குளிர்ந்த கதிர்களையுடைய திங்கள் விளக்காநிற்க
;
தண்கதிர் மதியம் நெடுவேளரசு வீற்றிருந்த
வெண்ணிலா முன்றில் முதலியவற்றைக் கடிகொள்ள என்க. வழி மொழி - ஏவல். மண்ணீடு -
சுதையாற் செய்த பாவையென்றுமாம். வெண்கால் - தந்தத்தாற் செய்த கால். கடி கொள்ளல்
- காவல் கொள்ளலுமாம். தான், அசை. |
|