|
|
எல்வளை மகளிர் ஏந்திய
விளக்கம்
பல்லாண் டேத்தப் பரந்தன வொருசார்
|
|
எல்வளை
மகளிர் ஏந்திய விளக்கம் பல்லாண்டு ஏத்தப் பரந்தன ஒருசார்-ஒளியமைந்த வளையலணிந்த
பெண்டிர் வாழ்த்துக் கூறிப் பரவுதற்கெடுத்த விளக்குகள் ஒரு பக்கல் மிக்கன;
பல்லாண்டேத்த மகளிர் ஏந்திய விளக்கம்
என்க ; என்னை ? மகளிர் விளக்க மேந்தி வாழ்த்தல் மரபாகலான் ; 1"வெண்டிரி
விளக்க மேந்திய மகளி, ருலக மன்னவன் வாழ்கென் றேத்தி" என முன்னர்க் கூறியதூஉங் காண்க.
எல் - ஒளி.
|
1.
சிலப். 28; 6-7
|
|