5. நடுகற் காதை

55

மண்கணை முழவும் வணர்கோட் டியாழும்
பண்கனி பாடலும் பரந்தன வொருசார்


55
உரை
56

       மண்கணை முழவும் வணர்கோட்டு யாழும்-மார்ச்சனை யமைந்த திரண்ட மத்தள வொலியும் வளைந்த கோட்டினையுடைய யாழோசையும், பண்கனி பாடலும் பரந்தன ஒருசார் - இசை கனிந்த பாடலும் ஒரு பக்கத்தே மிகுந்தன;

       முழவு - முழவொலி. யாழ் - யாழோசை. கனிபாடல், வினைத் தொகை.