மூலம்
5. நடுகற் காதை
மான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும்
கூனுங் குறளுங் கொண்டன வொருசார்
57
உரை
58
மான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும் - கத்தூரிக் குழம்பும் தொய்யிலெழுதும் வெள்ளிய சந்தனமும், கூனும் குறளும் கொண்டன ஒருசார் - ஒரு பக்கத்தே கூனுங் குறளும் ஏந்தி நின்றன;
வரி - தொய்யில்.