5. நடுகற் காதை


60

வண்ணமுஞ் சுண்ணமும் மலர்ப்பூம் பிணையலும்
பெண்ணணிப் பேடியர் ஏந்தின ரொருசார்


59
உரை
60

       வண்ணமும் சுண்ணமும் மலர்பூம் பிணையலும் - எழுதும் வண்ணங்களையும் பூசு சுண்ணங்களையும் மலர்ந்த பூமாலைகளையும், பெண்ணணிப் பேடியர் ஏந்தினர் ஒரு சார் - பெண் தன்மை மிக்க அழகிய பேடியர் ஒரு பக்கத்தே சுமந்து நின்றனர்;

       பெண்ணணிப் பேடியர் - பெண் தன்மையை விரும்பிய பேடியர்; 1"பெண்ணவா யாணிழந்த பேடி" என்றார் பிறரும். அணி - ஒப்பனையுமாம். மலர்ப் பூம்பிணையல் என்பதும் பாடம்.


1. நாலடி. 251