|
|
பூவும் புகையும் மேவிய விரையும்
தூவியஞ் சேக்கை சூழ்ந்தன வொருசார்
|
|
பூவும்
புகையும் மேவிய விரையும்-மலர்களும் புகையுறுப்புக்களும் விரும்பப்பட்ட வாசனையும், தூவியஞ்
சேக்கை சூழ்ந்தன வொருசார் - ஒரு பக்கத்தே எகினத்தின் இளமயிர் செறித்த பள்ளியைச்
சூழ்ந்திருந்தன;
ஈண்டுக் கூறிய வண்ணஞ் சுண்ண முதலியவற்றை, 1"வண்ணமுஞ்
சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும், பூவும் புகையு மேவிய விரையும்" என வரும் அடிகளானும் அவற்றினுரையானும்
அறிக.
|
1.
சிலப். 5; 13-4.
|
|