5. நடுகற் காதை


ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும்
சேடியர் செவ்வியின் ஏந்தின ரொருசார்


63
உரை
64

       ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும் - கண்ணாடியும் ஆடையும் அழகு செய்யும் இழைகளும் என்னுமிவற்றை, சேடியர் செவ்வியின் ஏந்தினர் ஒருசார் - ஒரு பக்கத்தே தோழிமார் அழகோடே ஏந்தி நின்றனர்;

       அணிதரு கலன் என்பதற்கு அணிந்துகொள்ளும் கலன் எனவுரைத்தலுமாம்.