ஆங்கு
அவள் தன்னுடன் அணிமணி அரங்கம் வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி - அங்ஙனமாக வந்த
அப் பெருந்தேவியுடனே அழகிய மணிகள் பதித்த நிலா முற்றத்தின் கண்ணே கடல் சூழ்ந்த
இவ்வுலகினை ஆளும் செங்குட்டுவன் அமர்ந்து;
அவள் - வதுவை வேண்மாள். வதுவை வேண்மாள்
மதிகாணிய வரும் வழி பரத்தல் முதலிய நிகழாநிற்க வந்த அவள்தன்னுடன் ஆள்வோன் ஏறி
என்க. வீங்குநீர் - கடல்.