5. நடுகற் காதை




70

திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும்
பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவும்
செங்கண் ஆயிரம் திருக்குறிப் பருளவும்
செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும்


67
உரை
70

       திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும் - திருநிலை பெற்றிருத்தலையுடைய சிவந்த அடிக்கண் தண்டை ஒலிக்கவும், பரிதரு செங்கையிற் படுபறை ஆர்ப்பவும்-சிவந்த கையிடத்தே தாங்கிய பறை முழங்கவும், செங்கண் ஆயிரம் திருக்குறிப்பு அருளவும் - ஆயிரம் சிவந்த கண்களும் தம் கருத்தினைப் புலப்படுத்தவும், செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும்-செவ்விய சடை பரந்து திக்குகளில் அலையவும்;

       வாய் புலம்பல் - ஒலித்தல்; ஒரு சொல். இதன்கண் சேவடி செங்கை செங்கண் செஞ்சடை என்ற அமைப்பு நோக்கத்தக்கது. சிலம்பு - கழலுமாம்.