|
10 |
போந்தைக் கண்ணிப் பொல்ம்பூந்
தெரியல்
வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்தர்
|
|
போந்தைக்
கண்ணிப் பொலம் பூந் தெரியல் - பனம்பூ மாலையினையும் பொன்னாற்செய்த தும்பைப் பூமாலையினையும்
சூடிய, வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்தர் - தம் மன்னனது போர்த்தொழிலை முடித்த
ஏந்திய வாளின் வெற்றியினையுடைய வீரர்கள் ;
முன்னர் 1"தோடார்
போந்தை தும்பையொடு முடித்த" என்றாராகலானும் 2"பொலம்பூந்
தும்பை" என்பவாகலானும் பொலம்பூந் தெரியல் என்பதற்குப் பொன்னாற் செய்த தும்பை மலர்மாலையென
உரைக்கப்பட்டது ; தும்பையுடன் வாகை மாலையும் கொள்ளுதலுமாம்.
|
1.
சிலப், 27 ; 45. 2.
புறம். 1.
|
|