|
|
பாடகம் பதையாது சூடகந் துளங்காது
மேகலை ஒலியாது மென்முலை அசையாது
|
|
பாடகம்
பதையாது சூடகம் துளங்காது - பாடகமானது அசையாதே தோள்வளை நடுங்காதே மேகலை ஒலியாது-
மேகலையணி ஒலி செய்யாதே, மென்முலை அசையாது - மெல்லிய முலை ஆடாதே, வார்குழை ஆடாது
- நீண்ட குழையாகிய காதணி அசையாதே, மணிக்குழல் அவிழாது - நீலமணி போலுங் கூந்தல்
அவிழாதே, உமையவள் ஒரு திறன் ஆக - உமாதேவி தன் இடப்பக்கத்தினளாக, ஓங்கிய இமையவன்
ஆடிய கொட்டிச் சேதம்-மாதேவனாகிய இறைவன் நடித்த கொடுகொட்டியை;
பாடகம்-மகளிர் அணியும் காலணி. திருமேனியின்
ஒரு கூற்றிற் சிறிதும் அசைவில்லையாக ஆடின னென்பதனால் அவ்வாட்டத்தின் அருமை புலப்படும்.
இறைவன் கொடுகொட்டி ஆடியதனை, 1"திரிபுர
மெரியத் தேவர் வேண்ட, எரிமுகப் பேரம் பேவல்கேட்ப, வுமையவ ளொருதிறனாக வோங்கிய,
இமையவனாடிய கொடுகொட்டியாடலும்" என்பதனா னறிக. 'புலம்ப' முதலிய எச்சங்களும், 'பதையாது'
முதலிய எச்சங்களும் தனித்தனி ஆடிய என்னும் வினை கொண்டு முடியும்.
|
1.
சிலப். 6-40-3.
|
|