|
|
பாத்தரு நால்வகை மறையோர்
பறையூர்க்
கூத்தச் சாக்கைய னாடலின் மகிழ்ந்தவன்
ஏத்தி நீங்க இருநிலம் ஆள்வோன்
வேத்தியன் மண்டபம் மேவிய பின்னர்
|
|
பார்த்தரு
நால்வகை மறையோர் பறையூர் - பகுத்தலரிய நான்கு மறைகளையுடைய அந்தணரது பறையூர்க்கண்
உளனாகிய, கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து - கூத்தச் சாக்கையன் ஆடுதலானே மகிழ்வுற்று,
அவன் ஏத்தி நீங்க - அச் சாக்கையன் தன்னைப் போற்றி நீங்கியவளவிலே, இருநிலம்
ஆள்வோன் வேத்து இயன் மண்டப மேவிய பின்னர் - பெரிய நிலத்தினையாளுங் குட்டுவன் அரசிருப்பாய
பேரோலக்க மண்டபத்தினை அடைந்தபின்;
பார்த்தல் - பகுத்தல். கூத்தச் சாக்கையன்
- கூத்து நிகழ்த்தும் சாக்கையன். சாக்கையன் கூத்தாடுந் தொழிலுடைய ஓர் குலத்தினன்.
அவள்தன்னுடன் ஆள்வோன் ஏறி மகிழ்ந்து மண்டபமேவிய பின்னர் என முடிக்க. |
|