5. நடுகற் காதை

80

நீலன் முதலிய கஞ்சுக மாக்கள்
மாடல மறையோன் றன்னொடுந் தோன்றி
வாயி லாளரின் மன்னவற் கிசைத்தபின்


80
உரை
82

       நீலன் முதலிய கஞ்சுகமாக்கள் - நீலனை முதலாகக் கொண்ட சட்டையிட்ட தூதுவர், மாடல மறையோன் தன்னொடும் தோன்றி - மாடலனாகிய அந்தணனோடு வந்து, வாயிலாளரின் மன்னவற்கு இசைத்தபின் - வாயில் காப்போரான் அரசனுக்கு அறிவித்த பின்னர்;

       நீலன் முதலியோர், கனக விசயரை இருபெரு வேந்தர்க்குக் காட்டிடச் சென்றோர்.