|
85
|
கோயின் மாக்களிற் கொற்றவற்
றொழுது
தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே
செம்பியன் மூதூர்ச் சென்றுபுக் காங்கு
வச்சிர மவந்தி மகதமொடு குழீஇய
சித்திர மண்டபத் திருக்க வேந்தன்
அமரகத் துடைந்த ஆரிய மன்னரொடு
தமரிற் சென்று தகையடி வணங்க
|
|
கோயின்
மாக்களிற் கொற்றவன்தொழுது - கோயிற் பணியாளருடன் சென்று மன்னவனை வணங்கி, தும்பை
வெம் போர்ச் சூழ்கழல் வேந்தே - தும்பை சூடிய வெவ்விய போரில் வல்ல கழலணிந்த மன்ன,
செம்பியன் மூதூர் சென்று புக்கு- சோழனது பழைய நகரத்தை அடைந்து, ஆங்கு வச்சிரம் அவந்தி
மகதமொடு குழீஇய - அவ்விடத்தே வச்சிர நாட்டுப் பந்தரும் அவந்தி நாட்டுத் தோரணவாயிலும்
மகதநாட்டுப் பட்டி மண்டமும் ஆய இவை கூடிய, சித்திர மண்டபத்து இருக்க வேந்தன் - ஓவியத்
தொழிலமைந்த மண்டபத்தின் கண்ணே சோழவரசன் இருந்தவளவில், அமரகத்து உடைந்த ஆரிய
மன்னரொடு - போரினிடத்தே தோற்றோடிய ஆரிய அரசர்களுடனே, தமரிற் சென்று தகையடி வணங்க
- அரசனுடைய பரிவாரத்தார் வழிவிடச் சென்று அம் மன்னனுடைய அழகிய அடிகளை வணங்க;
கோயில் மாக்கள் - கோயிற் பரிவாரத்தாருமாம்.
பரிவாரத்தார் வருவோரை உபசரித்தற்கும், அரசன்பால் அழைத்துச் செல்வதற்கும் உரிமையுடையராவர்.
வச்சிரம் அவந்தி மகதம் குழீஇய மண்டபம் என்க; என்றது இம்மூன்று நாடுடையாரும் திறையாகக்
கொடுத்த பந்தர் முதலிய மூன்றுங் கூடிய மண்டபம் என்றபடி; இதனை, 1"மாநீர்வேலி வச்சிர
நன்னாட்டுக், கோனிறை கொடுத்த கொற்றப் பந்தரும், மகதநன் னாட்டு வாள்வாய் வேந்தன்,
பகைபுறத்துக் கொடுத்த பண்டி மண்டபமும், அவந்தி வேந்த னுவந்தனன் கொடுத்த, நிவந்தோங்கு
மரபிற் றோரணவாயிலும்" என முற்போந்த தனா னறிக. வச்சிரம், அவந்தி, மகதம் என்பன
பிறந்தவழிக் கூறல் என்னும் ஆகுபெயர் என்க.
|
1.
சிலப். 5;66.
|
|