5. நடுகற் காதை


புதுவ தென்றனன் போர்வேற் செழியனென்
றேனை மன்னர் இருவருங் கூறிய
நீண்மொழி யெல்லாம் நீலன் கூறத்


107
உரை
109

       என்று ஏனை மன்னர் இருவருங் கூறிய-என மற்றைய தமிழ் மன்னர் இருவரும் மொழிந்த, நீண்மொழி யெல்லாம் நீலன் கூற - அறிவு நிறைந்த சொற்கள் எல்லாவற்றையும் நீலனென்பான் கூறிய அளவில்;

       நீண்மொழி - தவக் கோலத்தினரைத் துன்புறுத்தல் தகாதெனக் கூறிய அறிவுரை; பெருமித மொழியுமாம்.