5. நடுகற் காதை

110

தாமரைச் செங்கண் தழனிறங் கொள்ளக்
கோமகன் நகுதலும் குறையாக் கேள்வி
மாடலன் எழுந்து மன்னவர் மன்னே
வாழ்கநின் கொற்றம் வாழ்கவென் றேத்திக்


110
உரை
113

       தாமரைச் செங்கண் தழல் நிறங்கொள்ள - தாமரை மலர்போலுஞ் சிவந்த கண்கள் சிவப்பேற, கோமகன் நகுதலும்- செங்குட்டுவன் வெகுண்டு நகைத்த அளவிலே, குறையாக் கேள்வி மாடலன் எழுந்து - குறைவில்லாத நூற்கேள்வியினையுடைய மாடலன் எழுந்து நின்று, மன்னவர் மன்னே வாழ்க நின்கொற்றம் வாழ்கென்று ஏத்தி - அரசர்க்கரசே நினது வெற்றி வாழ்வதாக நீ நீடு வாழ்வாயாக வென்று போற்றி;

       அருளாற் செம்மையுடைய கண்கள் வெகுளியாற் சிவந்தன என்றார்.