5. நடுகற் காதை

யோனை வெண்கோடு அழுத்திய மார்பும்
நீள்வேல் கிழித்த நெடும்புண் ஆகமும்
எய்கணை கிழித்த பகட்டெழில் அகலமும்
வைவாள் கிழித்த மணிப்பூண் மார்பமும்


11
உரை
14

       யானை வெண்கோடு அழுத்திய மார்பும் - களிற்றியானையின் வெள்ளிய கொம்பு பாய்ந்த தம் மார்பினையும், நீள்வேல் கிழித்த நெடும்புண் ஆகமும் - நீண்ட வேல்பிளந்த விழுப்புண்ணையுடைய மார்பினையும், எய்கணை கிழித்த பகட்டெழில் அகலமும் - பகைவர் எய்த அம்பு துளைத்த பெருமையினையும் அழகினையும் உடைய மார்பினையும், வைவாள் கிழித்த மணிப்பூண் மார்பமும்-கூரிய வாள்வெட்டிய மாணிக்கக் கலன் அணிந்த மார்பினையும் ;

       எய்கணை, வினைத்தொகை. பகைவருடைய வேல் முதலியவற்றையும் யானையின் கோட்டினையும் மார்பில் ஏற்றுக்கொண்டமை கூறுதலின் அவர்களது ஊறஞ்சா வன்கண் புலனாகின்றது.