|
|
புரையோர் தம்மொடு பொருந்த
வுணர்ந்த
அரைச ரேறே யமைகநின் சீற்றம்
|
|
புரையோர்
தம்மொடு பொருந்த உணர்ந்த - உயர்ந்தோரோடு ஒப்ப மெய்பொருளறிந்த, அரைசர் ஏறே
அமைக நின் சீற்றம் - மன்னர் மன்னனே நின்சினம் அடங்குவதாக;
இனி, உயர்ந்தோரால் யாவற்றையும்
தெளிய வுணர்ந்தவென்றுரைத்தலுமாம். நீ மிக்க பெரும் படையை யுடையையாயினும் ஆன்றவிந்தடங்கிய
புரையோரொடு பொருந்த வுணர்ந்தனையாகலின் வெகுளல் தகாதென உணர்த்தியவாறாயிற்று. |
|