5. நடுகற் காதை


அகழ்கடன் ஞாலம் ஆள்வோய் வாழி
இகழா தென்சொற் கேட்டல் வேண்டும்


127
உரை
128

       அகழ் கடல் ஞாலம் ஆள்வோய் வாழி - அகழ்ந்த கடல்சூழ்ந்த இவ்வுலகினை ஆளும் அரசே வாழ்வாயாக, இகழாது என் சொல் கேட்டல் வேண்டும் - எனது சொல்லை இகழ்ந்து ஒதுக்காதே கேட்டருளல் வேண்டும்;

       அகழ் கடல் - சகரரால் தோண்டப்பட்ட கடல்; ஒப்புமை பற்றிப் பிறகடலையும் அகழ்கடல் என்றார்; ஆழமாய கடல் என்றலுமாம்.