|
|
வேந்துவினை முடித்த ஏந்துவாள்
வலத்துப்
போந்தைக் கண்ணிநின் னூங்கணோர் மருங்கில்
|
|
வேந்துவினை
முடித்த ஏந்துவாள் வலத்து-மன்னர்க்கு உரிய வினைகளைக் குறைவின்றியே முடித்த வாளேந்திய
வெற்றியினையுடைய, போந்தைக் கண்ணிநின் ஊங்கணோர் மருங்கின் - பனம் பூமாலையினையுடைய
நின் முன்னோருள்;
வேந்தர் முடித்தற்குரிய வினை யாவை என்பதனை, 1
"நின், னாடு குடிமூத்த விழுத்திணைச் சிறந்த, வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த,
இரவன் மாக்க ளீகைநுவல, வொண்டொடி மகளிர் பொலங்கலத்தேந்திய, தண்கமழ் தேறன் மடுப்ப
மகிழ்சிறந், தாங்கினி தொழுகு மதி பெரும வாங்கது, வல்லுநர் வாழ்ந்தோ ரென்ப" என்பதனான்
அறிக. ஊங்கண் என்பது கால முன்மையை உணர்த்திற்று.
|
1.
புறம். 23.
|
|