|
|
நான்மறை யாளன் செய்யுட்
கொண்டு
மேல்நிலை யுலகம் விடுத்தோ னாயினும்
|
|
நான்மறையாளன்
செய்யுட்கொண்டு-நான்மறையோதும் அந்தணனாகிய புலவன் பாடிய செய்யுளை ஏற்று, மேல்நிலை
யுலகம் விடுத்தோன் ஆயினும்-அவனைத் துறக்கவுலகத்துச் செலுத்தியோனும்;
நான்மறையாளன்- பாலைக்கௌதமனார்
என்னும் புலவர்; மேனிலையுலகம் விடுத்தோன் - இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு
குட்டுவன்; இவ்வரலாற்றினை, 1"பல்யானைச்
செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமனார் பாடினார். பத்துப்பாட்டு; பாடிப் பெற்ற பரிசில்;
நீர் வேண்டியது கொண்மினென யானும் என் பாரப்பனியும் சுவர்க்கம் புகல்வேண்டுமெனப்
பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பித்துப் பத்தாம் பெருவேள்வியிற்
பார்ப்பானையும் பார்ப்பனியையுங் காணாராயினார்" என்பதனானறிக.
|
1.
பதிற். 3 ; பதிகம்.
|
|