5. நடுகற் காதை





140

விடர்ச்சிலை பொறித்த விறலோ னாயினும்
நான்மறை யாளன் செய்யுட் கொண்டு
மேல்நிலை யுலகம் விடுத்தோ னாயினும்
போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கெனக்
கூற்றுவரை நிறுத்த கொற்றவ னாயினும்


136
உரை
140

       போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கென - நிலை பெற்ற உயிர்களை முறையின்றிக் கவர்தலைப் பரிகரித்து மூத்த முறைமையானே கொள்வாயாகவென, கூற்றுவரை நிறுத்த கொற்றவனாயினும் - இயமனை ஓர் எல்லையுட்படுத்திய மன்னவனும்;

       1"தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வ, ரீற்றிளம் பெண்டிராற்றாப் பாலகர், முதியோ ரென்னா னிளையோ ரென்னான், கொடுந் தொழி லாளன் கொன்றனன்" குவித்தலானே இங்ஙனம் அவனை வரைப்படுத்தான் என்க.


1. மணி. 6 ; 97-100.